ஆச்சி சொன்ன கதை
ஆச்சி சொன்ன கதை
************************
ஒரு கிராமத்தில்...
கணவனும் மனைவியும்
பேசிக்கிறாங்க...
மனைவி சொல்ற...
"நம்ம பையனுக்கு இப்ப ஆறு வயச்சி...
நாம பேசாம பக்கத்து டவுன்ல
சின்னதா ஒரு வீடெடுத்து
குடிபோய்டுவாமாங்க..."
எதுக்குடி இந்த ஊருக்கு என்ன குறைச்சல்...?
இல்லங்க...
அங்கதான் நல்ல பள்ளிகூடம் இருக்கு...
அங்கயே யோகா கிளாஸ்லாம் இருக்காம்...
நம்ம பையன் காலைல யோக கத்துக்கிட்டா
நல்லா நியாபகசக்தி...
கூர்ந்து கவனிக்கும் திறன் வரும்னு...
செல்வியக்கா சொல்லிச்சி...
அவங்க அண்ண பையன் கூட
அங்க தான் படிக்கானாம்...!!
வகுப்புல வாத்தியார் நடத்துறத
நல்லா கவனிச்சாத்தன,
நாளைக்கு நம்ம பையனும்
நல்லா வருவான்...
என்று அப்படி இப்படி சொல்லி
ஒருவழியாக
கணவனை சம்மதிக்கவைத்தாள் மனைவி...
அதற்கு கணவன்...
"அப்ப இந்த வீட்ட யாரு பார்த்துக்குவா...?"
உங்க அம்மா அப்பாவ பார்த்துக்க சொல்லிடலாம்....
கொஞ்ச நாளுக்கு தானங்க....
பையன் படிப்பு முடிஞ்ச உடனே திரும்ப வந்துடலாம்...!!
நாட்கள் மெல்ல நகர்ந்தது...
சின்னதா வீடும் பார்க்கப்பட்டது....
குடிபோகும் நாளும் வந்தது...
அந்த ஆறுவயசு பையன்
தன் அம்மாட்ட கேட்குறான்...
"இனிமே நைட் தூங்கும் போது...
ஆச்சி கதை சொல்ல வரதாம்மா...?
என்று...
உடனே அம்மா தன் பையனிடம்
சமாளிக்கும் விதமாக...
"கதை தானடா...
அம்மா உனக்கு நிறையா சீடி வாங்கித்தாறேன்...
அதுல நிறையா கதை இருக்கும்
போட்டுக் கேட்கலாம்.." என்று...
பாவம் அந்த வெல்லந்தியான அம்மாக்கு,
இன்னும் ஒன்னும் புரியல..
"இரவு தூங்குவதற்கு முன்...
பாட்டி சொல்லும் கதைய
கேட்டு கேட்டுத் தான்...
பல குழந்தைகளுக்கு
கூர்ந்து கவனிக்கும் திறன்....
வளர்கிறது என்று...."
இவண்
✒க.முரளி (spark MRL K)