மக்கள் முதல்வர் அம்மா

சந்தியாவின் மகளாக‌
புரட்சித் தலைவருக்கு அம்முவாக‌
நடிகையாக‌
எழுத்தாளராக‌
பின் அன்னையாக‌
அவதாரம் எடுத்து
தமிழகத்தை காத்த எங்கள் தாயே..
தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி
தாலிக்கு தங்கம் கொடுத்து..
மகள்களை புகுந்த வீடு அனுப்பிவைத்தீர்..
பேறுகால உதவியையும் சலிக்காமல்
செய்து கொடுத்தீர்....
அப்பிள்ளைகளுக்கு ..புத்தகப்பை... நோட்டு..
என பள்ளிக்கு அனுப்பிவைத்தீர்..
மதிய வேலை உணவில் சுண்டலும்.. முட்டையும் என‌
பிள்ளைகளின் நலனில் அக்கரை கொண்டீர்..
பிள்ளைகளுக்கு கால் நோகாமல் இருக்க‌
மிதிவண்டியை பரிசளித்தீர்..
கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத‌
மடிக்கணினியை மனதார மடியில் கொடுத்தீர்.
பெண்களுக்கு சுய தொழிலை கற்கவைத்தீர்..
துணிச்சல்...தன்னம்பிக்கை..விடாமுயற்சி
போராடும்..மனவலிமை என..
உங்களை பார்த்துதான் கற்றுக்கொண்டோம் ....
வங்கக் கடலோரம் தரை இறங்கிய..
அஞ்சாத அரசியல் சிங்கமே... இனி எப்போது காண்போம்
உங்களை போல் ஒரு வீரப் பெண்மணியை.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-Dec-16, 11:41 am)
பார்வை : 89

மேலே