கவிஞர்களுக்கொரு வேண்டுகோள்
வெற்றுப் புகழ்ச்சிக்காய் மண்டியிடும் மடக்கவிஞனோ நான்???...
வாழ்நாள் முழுவதும் அதிகாரவர்க்கம் தனை புகழ்ந்தே என் வாழ்நாள் முடிப்பேனோ???...
என் சித்தம் நிலையறியாயோ சிவசக்தி???...
தெளிவு தாராயோ மகாசக்தி???...
பாக்களால் பாடம் சொல்ல, நாவில் வந்து குடியேறுவாயோ சரஸ்வதி???....
மூடர்களில் மூடத்தனம் நீங்க,
அறிஞர்களில் அறியாமை நீங்க,
கவிஞர்களின் நாவில் கட்டுபாடு கண்ணியம் பிறக்க
எழுதுபவன் உண்மையை எழுத என்றும் அருள்புரிவாயோ அருட்பெருஞ் சோதியே???...
சொல்லியவண்ணம் வாழ்ந்தார் அவ்வள்ளாலார் பெருமான்...
அவரே எனது வழிகாட்டி....
ஆசைகளில்லா மனிதர்களில்லை...
ஆசைகளை நல்ல வழி படுத்தவர்கள் மனிதர்களே இல்லை...
ஞானத்துள் முதன்மையானது,
" கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக. ",
என்பதே...
அகில நன்மைக்கு வழிகாட்டும் வரிகள் எவையோ?
அவையே சிறந்தவை..
மற்றவையெல்லாம் வெற்றுக் குப்பைகளென
வீசியெறியப்பட வேண்டியவை...
மகிழ்ச்சியையும், துன்பத்தையும் போன்ற மனித உணர்வுகளை மட்டுமே முழங்கிக் கொண்டிருக்காமல்,
உலக ஒற்றுமையைப் பறைசாற்றி, மக்கள் ஒன்றுபட, நாடுகளென பிரிவினைகளேதும் இன்றி உலகம் முழுமை பெற உழைத்திடல் வேண்டும் கவிஞர்களே....