தீபஒளி திருநாள் 555

தீபம்...
கன்னியர்கள் நல்ல காளையர்கள்
வேண்டி குளத்தில் விடும் தீபம்...
குழந்தைகள் ஏற்றி மகிழும்
சின்ன தீபம்...
காற்றினை மாசுபடுத்தும்
புகையில்லாத தீபம்...
கண்களை பறித்துவிடும்
ஒளியில்லாத தீபம்...
இல்லந்தோறும் ஏற்றி
கொண்டாடும் தீபம்...
தீமைகளை சுட்டு
எரித்துவிடும் தீபம்...
தமிழனின்
கார்த்திக்கை தீபம்...
தீபஒளி திருநாள்
நல் வாழ்த்துக்கள்.....