“பூட்டைத் திற “ சிறுகதை
.இ.சி.ஆர். ரோட்டில் பிரம்மாண்டான கண்ணாடி மாளிகை அலுவலகம், ஏகப்பட்ட கணிப்பொறி இன்ஜினியர்கள், ஆபரேட்டாகள் .
ஆங்கே சாதாரண வேலைப் பார்க்கும் அருண்
எல்லோருக்கும் பரிச்சியமான ஆள்” படிப்பு என்னவோ பத்தாம் கிளாஸ்தான் அவனிடத்தில் கூடுதலா “கைவேலை” ஒன்று அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்தது..
“அதுதான் டேபிள் டிராயர்களின் எப்படிப்பட்ட பூட்டா இருந்தாலும் இலாகவமாய் அடுத்தவரிடம் இருக்கும் சாவியைக் கொண்டே திறப்பது”
சாவியை மறந்தோ….தொலைத்து விட்டு வருவபவர்களுக்கு “அள்றைய கடவுள்” அவன்தான். அந்த வகையில் எல்லோருக்கும் அறிமுகமாகி பகழ் பெற்றவன்.
அவனைப் பார்த்து “சில பணியாளர்கள்” இதோடா” பூட்டு திறக்கவரு வந்துட்டாரு” என அர்த்த புஷ்டியோடு சிரிப்பவர்களும் உண்டு
அன்று காலை பதினோரு மணியளவில் ஜி.எம் அறையில் இருந்து இன்டர்காமில் அருண் அழைக்கப்பட…
“ஸார்” கூப்பிட்டிங்களா… என ஜி.எம். முன்னால் நிற்க…
ஆமா அருண், வெளியூர் போன இடத்தில “பணம் வைக்கிற லாக்கர் சாவியை மிஸ் பண்ணிட்டிருக்கேன்.
“நீதான் எப்படிப்பட்ட பூட்டா இருந்தாலும் திறந்திடுவேன்னு பேர் வாங்கியிருக்கீயே “இத கொஞ்சம் திறந்திடு”பாங்க்லே பணம் கட்டணும்-னு அவசரப்படுத்தினார்
ஸார் ஒரு அரை மணி நேரம் குடுங்க… வெளியில போய்ட்டு வந்து முடிச்சுடறேன் என்றதற்கு
சீக்கிரம் வா …. என்றா ர் ஜி..எம்.
அடுத்த அரைமணி நேரத்தில் ஜி.எம். முன்னால்…. அருணுடன் “ஒரு ஆள் ஏகப்பட்ட சாவிகளை கொண்ட வளையங்கள், தேவையான உபகணரங்களுடன் நிற்க…… பூட்டு திறந்து...பாங்குக்கு பணமும் அனுப்பப்பட்ட பின் ”நீ தான் எப்படிப்பட்ட பூட்டா இருந்தாலும் திறந்திடுவேயே… நீ போய் இன்னெரு ஆளைக் கூட்டிட்டு வந்து….. என முடிப்பதற்குள்… இது சாதாரண விஉயமில்லை ஸார்…. ஒரு நாளைக்கு நீங்களே பணத்தை மறதியாய் வீட்டுல வைச்சுட்டு வந்து காணோம்ன்னு ...சந்தேகம் வந்தா… … என முடிப்பதற்குள் ஜி. எம்-முக்கு புரிந்தது…..உங்களுக்கும்…..புரிந்திருக்குமே...
கே. அசோகன்