எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சாதிவெறி கொண்டதனால் சண்டையிடும் மக்கள்
---- சமுதாயம் சீர்கெடவே சாத்திரங்கள் சாற்ற
நீதிநெறிக் கெட்டுவிட நிம்மதியும் போக்கி
----- நித்திரையும் மாறி நிலைகுலைந்துப் போவார் .
பாதியிலே சாக்காடும் பாரினிலே வந்துப்
----- பாசமதைப் பங்கிடுமே பாதையும் வேறாய்
மேதினியி லுழல்கின்றார் மேன்மையின்றிச் செத்து
----- மேலோகம் சொர்க்கமிலை மேவிடுமோ வாழ்வே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
