பல விகற்ப நேரிசை வெண்பா வெண்ணிலவின் தண்ணொளியில் அன்னமுண்ண ஆசைகொண்டு

பல விகற்ப நேரிசை வெண்பா ..


வெண்ணிலவின் தண்ணொளியில் அன்னமுண்ண ஆசைகொண்டு
மண்ணிலிரு பல்குடும்பம் பார்த்திருக்க விண்மீதில்
வெண்ணிலவு புன்னகைக்கும் வேளையிலே கொண்டுவந்தார்
தின்பண்டம் உண்பதற் கு

விண்மீதில் மின்மினிகள் கண்சிமிட்டிக் காத்திருந்து
புன்னகைக்கப் பார்த்திருந்த கார்முகில்கள் வெண்ணிலவை
சூழ்ந்திடவே பூமகள்மேல் வீழ்ந்திருந்த வெண்ணிலவின்
தண்ணொளியைக் கவ்விய தே

குறிப்பு: வெண்பாவின் உரை பொருள் ..

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் கடந்த நவம்பர் மாதம் 8ந் தியதி அறிவித்த முடிவால் சாமானிய மக்கள் பயன்பெறவில்லை என்பதாகும்..

13-12-2016

எழுதியவர் : (13-Dec-16, 12:02 pm)
பார்வை : 58

மேலே