சீற்றம் கொள்வதேன்

சீற்றம் கொள்வதேன் ?

வாராதா ? மா-மழையேனெ காத்திருந்தோமே!
வர்தாவாய் வந்தேதான் சீறீப்பாய்ந்தாய் !
சீராகத்தான் பொழிவதை நிறுத்த லாமோ ?
சீற்றம் கொள்வதேன் எங்கள்மேலே!

சாலையோரம் மரங்களை வைத்(து)-அதனில்
சாயுங்காலம் இளைப்பாறி காற்று வாங்க
ஆலையின் பெரும்சத்தமாய் ஆவேசமாகி
அலைகளையே துணைக்கு அழைத்தாயே!


தென்றலாக தழுவுகையில் மகிழ்ந்தோமே!
திக்கெட்டும் சுழற்றுகிறாய் தொலைந்தோமே!
கொன்றுதான் குவித்தாய் மரங்களையே!
நன்றுஆமோ? நீர்செய்யும் செயல்தாமோ

ஆண்டுகளின் இறுதியில் கோபம் ஏனோ ?
அவதிதான் மக்களுக்கு நியாயம்தானோ ?
வேண்டுகின்றோம் ஆழ்த்தாதே துயரிலே
வெறுத்தே புலம்புகின்றோம் மன-அயர்விலே!

----கே. அசோகன்

எழுதியவர் : கே.அசோகன் (13-Dec-16, 10:12 pm)
பார்வை : 434

மேலே