தகடு தத்தம் வெளியானதோ...

அடுப்பங்கரையில் இருந்தே
சோகமாய் வரும் பூனையே...
நீ தேடும் பால்சட்டி இல்லையோ.?
தினமும் பால் திருடி குடித்தாயே இன்று உன் தகடு தத்தம் வெளியானதோ...?

வீட்டுக்குள் சிறை வாழ்க்கையா...
அன்னையை ஏமாற்றி காதலனுடன்
ஊர் சுற்றி திரிந்த பெண்ணே
உன் தகடு தத்தம் வெளியானதோ..?

ஆசிரியரிடம் அடி வாங்கி அழும் சிறுவனே...
தினமும் பள்ளியில் ஆசிரியரை
ஏமாற்றி நீ வீட்டுப்பாடம்
செய்யாமல் பதுங்கியிருந்தாயே..
இன்று உன் தகடு தத்தம்
வெளியானதோ...?

தமிழ் மக்களை ஏமாற்றி
ஈழமண்ணில் செயல்பட்ட
அரசியல் தலைவர்களே!
இன்று உங்கள் அமைதியின்
காரணம் தான் என்னவோ...?
வெளியுலகிற்கு உங்கள் தகடு தத்தம்
வெளியானதோ...?

குற்றம் என்றும் நிலைக்காது
நீண்ட நாள்....
என்றோ ஓர் நாளில் வெளியாகும்
அவ் தகடு தத்தம் ...!

எழுதியவர் : சி.பிருந்தா (14-Dec-16, 1:53 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 35

மேலே