ஆழிக் கடலில் ஊழிக் காற்று
ஆழிக் கடலில்
ஊழிக் காற்று
கூவிச் செல்லத்
தாவித் தாவி
கோரத் தாண்டவம்
ஆடிச்செல்ல
சூறை யாடிய
கூரை எல்லாம்
ஓடி யோடி
தேடிப் பார்த்தார்
காணோம் எங்கும்
வார்தா புயலால்
விளைந்த நாசம்
வழித்தட மெங்கும்
விழுந்த மரங்கள்
விழிகள் கண்டால்
சிந்தும் கண்ணீர்
ஆ ழி க் காற்றுத்
தூவிச் சென்ற
நீரால் நன்மை
பெறுவோம் நாமே
போரடித்து திணவெடுத்த
தோள்கள் இருக்க
தோல்வி இல்லை
14-12-2016
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
