நானும் இறைவனும்

நானும் இறைவனும்




அந்த நாள்!
யானும்யென் விழிகளும் ஒருநீண்ட பயணம்
யான் கண்டயிறைவண் பல்வேடங்களிலவ தரிக்கப்பட்ட அற்புதம்

அரும்புகள் சூழ்ந்தநடைப் பாதையில் கண்டீர்க்கப்பட்டேன்!

இயற்கை வட்டத்தில்தேர்ந் தெடுக்கப்பட்டச்சுக்
களால்விளம்பியது போலொர் நெடுமோமியம்

அதனருகிலொ தொட்டிலாடும் விழுதுகளுடன் ஓங்கியுயர்து நின்றபடியொர் பச்சைக்காவியன்

அவனோ டினைந்து கோர்ந்தபடினான்
என்னவோரழகு! மனம்பூத்தேன்

சட்டென்று விழியின் மயக்கம் ஏதோவொர் பதட்டம்
இருள் சூழ்ந்ததருனம்மரு
கனமேயெட்டிய திரைகள்யாவும் விசித்திர கோலம்!

வின்னுலம் சலித்து மன்னுலகமுலாவந்த காற்றன்
மெல்லிய மனம்வீச்சோடு தன்னையறி முகப்படுத்தியவாரு
காவியனை தன்சுவாசத்தால் அசைத்தபடி வலம்வந்தான்

சருக்கென்று வீழ்ந்த கிளைகள் பிரிவினை ஏற்காதுடன் னவிழ்ந்த மலர்கள்
முடிவில்லா வண்ணக்குழம் புகள்நிறைந்தவோடைத் தொட்டி யில்யினைந்த மகிழ்ச்சியில்
இடையே வீற்றிருக்கும்
பாறைச்சுவரில் மோதியபடி
தாலம்போட
தன்பின் நீந்திவரும் மொட்டுகளங்கும் மிங்கும்மெட்டுக் கினைங்குவாரு நடனித்து
நதியின்மேல் உரசியூர்ந்தவாரு முத்தமிட்டபடி அவ்விடம் கடந்தவண்ணம் கண்டேன் ...
இறைவன் இயற்கை வேடத்தில்
பல அவதாரமாய் காட்சியளித்ததை வேறு எப்படி சொல்ல?!....

எழுதியவர் : ரா. சுரேஷ் (16-Dec-16, 2:18 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 96

மேலே