பல விகற்ப இன்னிசை வெண்பா வேரோடு லஞ்சத்தை வீழ்த்திடவே இந்நாட்டில்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

வேரோடு லஞ்சத்தை வீழ்த்திடவே இந்நாட்டில்
வார்தா புயல்போல் வருவாரோ ஓர்தலைவர்
என்றதொரு ஆதங்கம் இன்னுமுண்டு நாட்டுப்
பொதுமக்கள் பல்லோர்க்கு மே

கள்ளப் பணம்வைத் திருக்கும் பெருந்தலைகள்
அச்சடித்த நோட்டின் இளஞ்சிகப்பு காயும்முன்
கைப்பற்றி வைத்திருக்க தேடுகிறார் எங்கெங்கோ
வீசிவலை மேலர சு

வீசுவலை வீழ்ந்திருக்கும் கோடானு கோடிமக்கள்
வங்கிகளின் வாசலிலே வீற்றிருந்து தம்பணத்தை
தாவென் றுதவமி ருக்கும்கா லம்வரும்
என்றறிந்தி ராரிலை யே

வறியோரின் ஊதியம் வங்கியில் வைப்பிருக்க
ஓர்சிறுதொ கையே தருவீரென் றாகிவிடின்
மேலரசின் உள்நோக்கில் வேறேதோ உள்ளதென்று
ஓர்நாள் உணர்வார் பலர்

கறுப்புப் பணவேட்டை கண்துடைப்பு நாடகமே.
காலம் உருண்டோட மேன்மை அடைவார்
பணமாற்ற மில்லா பரிவர்த் தனைமூலம்
என்பதோர்ப கற்கன வே.

எழுதியவர் : (20-Dec-16, 3:09 pm)
பார்வை : 69

மேலே