காற்றாக நீ

அன்பே
தென்றல் காற்றாக நீ
தீண்டிச் செல்ல
தினம் தினம் தினறினேன்!,

வாடைக்காற்றாக நீ வீசியபோது
என் வயதினை உணர்ந்தேன்,

மூச்சிக்காற்றாக நீ முழுவதும் வீச
மூழ்கி கிடக்கிறேன் உன்னிடம்,

பனிக்காற்றாக உன் பார்வை வீச
உன்னிடம் பாழாய் போனது
என் மனம்!!

அழகே
உருவம் இல்லா காற்றை போல
உன் காதல் என்னிடம் இருப்பதை
என்னிடம் தோன்றிய மாற்றங்களை
கண்டு உணர்ந்தேன்!!!!

ஆனால்
உயிரே உருவம் கொண்டு
உயிர் வைத்திருக்கும்
என் காதலை உணர உன்னிடம்
உணர்வுகள் இல்லையா?!

அல்ல
உன்னிடம் உள்ளம் இல்லையா?!..
.........................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (22-Dec-16, 6:06 pm)
Tanglish : kaatraga nee
பார்வை : 162

மேலே