பாசக்கயிறு

அனபானவளே பாசகயிறு வீசி என் உடலில் இருந்து உயிரை உன் பின்னால் எடுத்து செல்லும் எமன் நீயே......

எனக்கு என்ன தண்டனையை தர போகிறாய் பெண்ணே....

தருவதாக இருந்தால் நான் விரும்பும் ,தண்டனையை தந்து விடு பெண்ணே......

என்னவென்றால்........!!

உன் பாசத்திற்காக ஏங்கும் பச்சிளங் குழந்தையாக என்னை மாற்றி விடு பெண்ணை.....

நீ எனக்கு நிலவை காட்டி சோறு ஊட்ட வேண்டியதில்லை......

நிலவை போன்ற உன் முகத்தை காட்டு பெண்ணே போதும்......

சமத்தான பிள்ளையாய் சாப்பிடுவேன் பெண்ணே என்றும்.......

பாட்டி கதைகளை சொல்லி தூங்க வைக்க வேண்டியதில்லை பெண்ணே......

உன் மடியில் என்னை உறங்க வைத்து தலையை கோதி விட்டால் போதும் பெண்ணே.......

நான் உறங்குவேன் குழந்தையாகவே!!! என் ஆயுள் முழுவதும் பெண்ணே......

இந்த தண்டனையை தந்துவிடு போதும்...

என் உயிரை என்றும் உனக்கே தந்து விடுகிறேன் பெண்ணை.....

அன்புடன்..... கிருபா....

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (23-Dec-16, 9:48 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
பார்வை : 60

மேலே