தொடரட்டும் யுத்தம்

மோடியின் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்களென்று பொங்கிக் கொண்டிருக்கும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும்புள்ளிகளுக்கு, " எங்களிடம் ஒரு ஐநூறும் இல்லை. ஒரு ஆயிரமும் இல்லை. ஒரு இரண்டாயிரமும் இல்லை. எந்தக் கஷ்டமும் இல்லை.. ", என்று பதில் கொடுக்கிறேன் நானுமொரு ஏழையாய்....

மடியில் கனமுள்ள கனவான்களே கதறித்திரிகிறார்கள்...
நடக்கட்டும் யுத்தம்,
ஊழல் மற்றும் கருப்புப்பணம் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை...
இளைஞர்கள் நாங்கள் துணை வருவோம்,
ஊழல் மற்றும் கருப்புப்பணத்திற்கு எதிரான யுத்தத்தில்
போர்வீரர்களாய்...

எதிர்வரும் கயவரின் சூழ்ச்சியினை எங்களின் நன்மதி கொண்டே முறியடிப்போம்....
இனி பின்வாங்குவதென்ற பேச்சிற்கே இடமில்லை...
தொடரட்டும் யுத்தம்...

மாநிலங்களுரிமை என்றே கூச்சலிடும் கூட்டங்களின் சூளுரையைப் பற்றி எக்கவலையும் வேண்டாம்....
மக்களுக்காக மகத்தான பணி தொடரட்டும்....

குற்றமில்லா, ஊழல்களில்லா, பதுக்கல்களில்லா,
யாவருக்கும் யாவும் கிடைக்கும் புதியதொரு
இந்தியாவை உருவாக்குவதே நம் நோக்கமாகட்டும்...

தொடரட்டும் யுத்தம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Dec-16, 6:48 pm)
Tanglish : thodarattum yutham
பார்வை : 2020

மேலே