தாவணிப்பெண்ணே

அடி அழகே!
நீ நடந்து போகையில்
உன் முந்தானையும், முடியும்
முட்டி மோதி கொள்கிறதா?
இல்லை முத்தமிட்டுக் கொள்கிறதா?

உன் வளையல்கள் கூச்சலிடுகிறதே
நீ அணிந்து கொண்ட ஆனந்தத்திலா?
இல்லை உன்னை அணைத்துக்கொள்ளும் ஆர்வத்திலா?

நீயோ ஊரிலுள்ள மலர்களையெல்லாம் ரசிக்கிறாய்
ஊரும், மலர்களும் உன்னைத்தானே ரசிக்கிறது..!

நீ சூடும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் மணத்தால்தான் கிறங்கிபோகிறது போலும்!

உன் தாவணியில் தள்ளாடும் என்னை
உன் கண்களால் கட்டி இழுத்து
உன் இதயத்தில் இடம் கொடுத்து விடு

உன் இடையிடையே உறைந்து போன என்னை
உன் இதழ் கொண்டு இரட்சித்துவிடு..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Dec-16, 5:32 pm)
பார்வை : 81

மேலே