நம் பாரம்பரிய உடையில் நீ

மஞ்சள் வெயில் மாலையிலே
மடித்துக்கட்டிய வேட்டியிலே
வீரநடை போட்டு வீதியிலே
நீ வரக்கண்டேன்..!!

ஒரு நொடி மண் நோக்கிய பின் உன் கண் நோக்கினேன்
அடடா! என்ன இது?
எப்பொழுதும் என்னை விழுங்கும் உன் விழிகள்
வித்தியாசமாய் விழித்துக் கொண்டிருக்கிறதே..!!

உன் இடை விடுத்து தரை தொட்டுக்கொண்டிருக்கிறது
உன் வேட்டியின் மறு நுனி..!!

வேந்தனே!
என்றும் நாண வில்லை என்மேல் தொடுப்பதுதானே உன் வழக்கம்..
இன்று என்ன வழக்கத்திற்கு மாறாக..!

ஊரே பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்க..!!
நாம் மட்டும் தயங்கித் தயங்கி
தவழ்ந்து கொண்டிருக்கிறோம்..!!

மாவீரனே..!!
மஞ்சளும், மையும்
கலந்த வண்ணத்தில் நீ மிளிர்கிறாய்..!!

நாணமும், காதலும் கலந்த
உன் பார்வையாலே என்னைப் பிழிகிறாய்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Dec-16, 12:48 pm)
பார்வை : 76

மேலே