புத்தாண்டே வருக வருக
புத்தாண்டே வருகவே !
---- புத்துணர்வு தருகவே !
புகுத்திடுவோம் புதுமையினை .
----- புத்தாண்டில் எல்லோர்க்கும் .
வகுத்திடுவோம் வாழ்வுமுறை .
----- வந்திடுமே நல்வாழ்வு !
பகுத்திடுவோம் நன்னெறிகள்
---- பல்லோரும் பயன்பெறவே .
தொகுத்திடுவோம் கூட்டத்தை
----- தொடரட்டும் நம்பணிகள் !!!!