லவ் பேர்ட்ஸ்

*லவ் பேர்ட்ஸ்*
****************

அவனும் அவளும் காதலிக்கிறாங்க...
அவளுக்கு பறவைனா ரொம்பப்பிடிக்கும்...

ஒருநாள்
அடிபட்ட காக்காவுக்கு உதவப்போய்
அவன, இவளுக்குப்பிடிச்சிப்போய்
கலப்போக்கில் அது காதலாய்
மாறிடுச்சி...

அந்த காக்காவுக்கு
செஞ்ச சின்ன உதவிதான்...
இவன் காதலுக்கு பெருசா உதவிச்சி...

அவளுக்கு துணையாக அவள் வீட்டில்
ஒரு பெண் கிளி கூடவே இருக்கும்...
அதற்கு அவள் வைத்த பெயர் "மீனாட்சி"

அதெற்கென்று
தனிக் கூண்டு வீட்டில் இருக்கும்....

அவள் மாதிரியே அதுவும்
அழகாய் பேசும்...

பல நேரம்
அவள் சொல்வதை
அவன் வீட்டிற்கு பறந்துசென்று
அப்படியே சொல்லும்...!

இப்படியாக... இவர்கள் காதலுக்கு
தூது சொல்லி வாழ்ந்தது...!!

ஒரு நாள்
அவளுக்கு பிறந்தநாள்...

அன்று அவளுக்கு
இன்ப அதிர்ச்சி தருவதற்காக
காடு மேடெல்லாம் சுற்றி
ஒரு ஆண் கிளியைப் பிடித்தான்...

இரவு பனிரெண்டு மணி...

யாருக்கும் தெரியாம
அவள் வீட்டுக்குள் நுழைந்து
மாடியில் அவள் அறைக்கு சென்று...
அவளை மெல்ல எழுப்பி...
ஆண் கிளயை பரிசளித்து...

"நாம் துணைசேர துனையாக இருந்த...
நம் கிளிக்கு ஒரு துணை வேண்டாமா..."
என்றான்...

பின்
அவளே அந்த கிளியை கூண்டில் விட
பெண்கிளி ஆண்கிளியை பார்த்து...
தலைகுனிந்து ஒதிங்கி நிற்க...

"வெக்கத்த பாருங்க மீனாட்சிக்கு..."
என்று அவள் சொல்ல...

அந்த கிளி மெல்ல வாய் திறந்து சொல்லியது...

"அடப்பாவிங்களா....
உங்க ரெண்டுபேருக்கும் பிடிச்சிபோனதுனால
காதலிச்சீங்க...
நானும் துனையா இருந்தேன்...

அவள சந்தோஷப்படுத்த
யாரையோ பிடிச்சிட்டுவந்து
என் கூண்டுல விட்டு...

இவன் தான் உனக்கு ஜோடின்னு
சொல்றீங்களே...

உங்களுக்கு வருவது இரத்தம்...!
எனக்கு வருவது தக்காளிச் சட்டினியா...!!"

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (28-Dec-16, 10:04 am)
சேர்த்தது : க முரளி
பார்வை : 961

மேலே