வருத்தப்படாத கரடி சங்கம்

மகாநதியும்
அந்நியனும் தான்
சாதாரண மனிதனின் வாழ்க்கை....

நேர்மையானவர்களுக்கு
காலமும்
உலகமும்
ஒரு வித இடரை தந்து கொண்டே இருக்கும்.......

நாம் எல்லாவற்றையும் டேக் இட் ஈசி
என்று எடுத்துக் கொண்டாலே
நவரசமும் நிறைந்த மனித வாழ்க்கையை இயற்கையோடு
இணைந்து
இசையோடு மகிழ்ச்சியாக வாழ முடியும் (வேண்டும்)....

*******************

ஆப்ஷன் இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை....
சில பேர் சொல்வார்கள் எனக்கு நிறைய ஆப்ஷன் என்று....

ஆப்ஷன் உருவாக்குகீறீர் எனில்
பொய் சொல்கிறீர்
நடிக்கிறீர்
ஜால்ரா அடிக்கிறீர் என்று அர்த்தம்...

நடிப்பவர்களுக்கும்
பொய் சொல்பவர்களுக்கும் தான் உலகம்

ஆம் ஆனால்

உண்மையாக
நேர்மையாக இருப்பது எவ்வளவு ஆத்ம திருப்தியை தரும்....

நாமே எழுதி வெற்றி பெறுவது தான் வெற்றி...
பிட் அடித்தால் மனம் பதை பதைக்காமல் போனால்
நீ தவறாகி விட்டாய் எனலாம்.....

மின்னுவதெல்லாம் பொன்னல்ல....

சில பேர் நல்லவர்கள் போல்
நுனி நாக்கு தேனோடு நடிப்பர்
அவர் தான் உண்மை...என்றும்...

பலாப்பழம் போல்
வெளியில் பொய்யாக நடிக்காமல்
அகத்தில் பாசம் காட்டுபவரை
திமிர் என்பார்கள்....

உதாரணமாக
நன்றாக படித்து விட்டு வருபவர்களை திட்டுவதும்
ஊர் சுற்றிவிட்டு சீக்கிரம் வருபவர்களை பாராட்டுவதும்...

எதையும் ஆழ அறிந்தே உணர்ந்தே
கூற வேண்டும்....

நிறைய பாட்டிகள் சொல்வார்கள்...
படிக்க போறா படிக்க போறானு பாத்தா
பாவி இப்படி பண்ணீட்டாளே....

இது தான்...

எல்லாமே தவறான புரிதல்கள்...
ஆரம்பத்திலேயே சரியான புரிதல் வேண்டும்....

சமூகம் ஒரு கலவையான கூடு (எல்லாமே உள்ளது...நயவஞ்சகம் , நம்பிக்கை ....)
இயற்கை ஒரு பூக்காடு
காலம் ஒரு தேன்க்கூடு

நாம் நல்லதையே சிந்திப்போம்...
நல்லதே நடக்கும்.....


சும்மா லோலலாயி

ஹா ஹா .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Dec-16, 6:24 pm)
பார்வை : 247

மேலே