ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு அதுதான்டா
எங்க மரபுவழி வீரவிளையாட்டு...

வாடிவாசல்கிட்ட வந்து நின்னுப்பாரு
காளையன் வெளியவரும் அழகப்பாரு...

காளையன் காத்திருக்கான் தை மாசத்திற்காக
தமிழனும் காத்திருக்கான் திமில கட்டியணைக்க
தடைய நீக்கிட்டு பாரு எங்க தமிழன் வீரத்த...

காளைய நாங்க மாடா நினைக்கல
உறவா நினைச்சுதான் உயிரா வளக்கறோம்
ஒருநாள் வீரவிளையாட்டுகாக தான்
வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கறோம்...

நீதிய மதிச்சா ஏறி மிதிப்பிங்க
ஜல்லிக்கட்ட நிறுத்தி காளைய அழிப்பிங்க
விவசாயிய அடிமையாக்கி நிலத்தை பறிப்பிங்க
விவசாய நிலத்தில் தொழிற்சாலை அமைப்பிங்க
எதிர்த்து கேட்டா உயிர எடுப்பிங்க...

எட்டு வருசமா ஏமாற்றம் அடைந்துடோம்
இனிமேலும் ஏமாற நாங்க தயாராயில்ல
தடைய மீறிதான் ஜல்லிக்கட்ட நடத்துவோம்...

தமிழா இது மாட்டோட பிரச்சினை இல்லடா
தமிழ்நாட்டோட பிரச்சினைடா
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு மட்டுமல்லடா
தமிழனின் அடையாளம்டா...

அடையாளத்தை இழந்தால் தாய் நாட்டிலும்
நாம் அகதிகள் தான்டா
தமிழனையும் தமிழனின் அடையாளத்தையும்
பாதுகாத்திட ஒன்றிணைவோம் வாடா...

#Poetu_Raja ✍🏼

எழுதியவர் : ஆ.மு.ராஜா (30-Dec-16, 6:37 am)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 406

மேலே