கயல்மேல பாய்விரித்து
கயல்மேல பாய்விரித்து மோனமதில் நானுறங்க
என் மேல விழிவிரித்து வெண்ணிலவு.மனம்கிறங்க
துள்ளிவரும் நீரலைகள்
மேனியிலே சிலீர்க்கையிலே
உன் தாலாட்டும் நினைவலைகள்
நெஞ்சமதில் துள்ளுதடி
உன் சுட்டும் விழிச்சுடரில்
மெட்டாய் மலரரும்ப
சிட்டும் என் நெஞ்சினிலே
சிட்டாய் பறக்குதடி
நித்தம் என் நெஞ்சுக்குள்ளே
நீ தாழம்பூ வாசமடி