தொடரும் ஆண்டிலும்

மாற்றங்கள் மட்டும் மாற
மறவாமல் போக,
நாட்கள் தனில் தொலைந்த
நாழிகைகள் மனதில் நங்கூரமிட்டு
தொடர்நாட்களின் நாட்குறிப்பேட்டை
மீட்டிப் பார்க்கிறது.

கிழித்தெரியப்பட்ட திகதி தாள்களில்
முடிவிலியாக சில நிகழ்வுகள்,
தொடங்கவிருக்கும் ஆண்டின்
தொடர்ச்சிக்காக அதோ அங்கேயே
காத்திருக்கின்றது.

வழக்கம் போலவே திகதியிடப்பட்ட
நாற்குறிப்பேட்டுப் பட்டியலின்
ஆரம்பம் என்னவோ இது தான்.
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

அஸ்தீர்..

எழுதியவர் : அஸ்தீர்.. (1-Jan-17, 9:37 pm)
பார்வை : 71

மேலே