பல விகற்ப பஃறொடை வெண்பா காசில்லா நாட்கள் கடன்தருவார் யாரென்று
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
காசில்லா நாட்கள் கடன்தருவார் யாரென்று
ஊரெல்லாம் தேடி யொருவர் கிடைக்காமல்
வாழ்ந்திருந்த நாட்களில் நொந்திருந்தார் தம்விதியை
காசிருந்தும் வங்கிக் கணக்கிலின்று ஊரிலுள
தானியங்கி யந்திரத்தில் காசின்றிப் போனதற்கு
யார்வினை கார ணமோ
04-01-2017