ஆசி

மாதம் மும்மாரி பொழிந்திருந்தால்
விவசாயம் நாட்டில் தழைத்திருந்தால்
நெற்கதிர் கைகளாய் வளர்ந்திருந்து
ஆசியை குறைவின்றி கொடுத்திடுமே..

நீதியும் நேர்மையும் நிலைத்திருந்தால்
சாதியும் சண்டையும் ஒழிந்திருந்தால்
ஊழலும் இனவெறியும் இல்லையென்றால்
ஆசிகள் அளவின்றி கிடைத்திடுமே..

ஏழையும் கூட சிரித்திருந்தால்
பசியின்றி ஒருவர்கூட இல்லையென்றால்
சமத்துவம் எங்கெங்கும் உள்ளதென்றால்
ஆசிகள் உலகத்திற்கே சொந்தமன்றோ..

இருப்பவர் இல்லாதோருக்கு உதவிசெய்ய‌
இல்லாதோர் இல்லாத இடமாய்மாற‌
நல்லது மட்டுமே நடந்துவந்தால்
ஆசிகள் எல்லோருக்கும் உரித்தாகுமே..

பணம்மட்டும் தானே வாழ்கிறதே
பழகிய சொந்தமெல்லாம் பிரிகிறதே
மனமெல்லாம் மடிந்து கற்களானால்
ஆசியை எவர்தான் தந்திடுவார்?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-17, 10:15 pm)
Tanglish : aasi
பார்வை : 152

மேலே