காதல் நிலா
காதல் நிலா
***************
நிலவின் ஒளி
இரவை பகலாக்க
முயற்சிக்க,
நிலவின் முயற்சிக்காக
நட்சத்திரங்கள்
கைகோர்க்க,
விடியலும் விடியாமல்
நிலவொளியை பகளென்று
தனை மறக்க,
நிலவுக்காக சூரியனும்
தன் கதிரை
விட மறுக்க,
நெடு நீண்ட
பகளென்று பூக்களும்
துயில் மறக்க,
வெள்ளைச்சூரியன்
என்று உயிர்களும்
அதிசயிக்க,
என்றெல்லலாம்
நிலவை நான்
வர்ணிக்க,
நாணத்தில் நிலா
மேகத்தை எடுத்து
முகம் மறைக்க,
தென்றலின் கரம்
நிலவின் நாணம்
உடைக்க,
தன் முகம் மறைக்க
இடம் இன்றி
நிலா தவிக்க,
என் காதல் கொண்டு
அவள் வெட்கம்
மறைத்தாள்,
என்னவள் மேல்
நான் கொண்ட காதல்,
நிலவின் கவிதையாக...
மனோஜ்