செந்த​மி​ழ்ச்சாரலில்​ செய்த கூடு

செந்த​மி​ழ்ச்சாரலில்​ செய்த கூடு
உலகத்தமிழரின் இதயச் சுவடு
இன்பத்​தமிழரின் புதுமை ஏடு !

​தமிழர்களை இணைக்கும் கருவி
தேனமுதுக் கவிதைகளின் அருவி
வாழ்கின்ற தமிழர்களின் சுவாசம் !

முகநூல் முற்றத்தின் சாரல்
நிலையாக வீசிடும் தென்றல்
முகிழ்ந்த முல்லையின் வாசம் !

கவிஞர்கள் வாழ்கின்ற இல்லம்
சிந்தனை ஊற்றுக்களின் ஆக்கம்
தொடர்ந்து அளித்திடும் ஊக்கம் !

நடத்திடும் போட்டிகள் ஓர்வாய்ப்பு
சிதறிடும் எண்ணங்களின் தொகுப்பு
வாசிக்கும் நமக்கெல்லாம் வியப்பு !

குழுமங்கள் கூடுவதும் சிறப்பு
குறையிலாத் தமிழின் பெருமை
தலைமுறைக்கு உதவும் வழிகாட்டி !

தொடரட்டும் செந்தமிழ்ச்சாரல் பணி
தொடர்வோம் தொய்வின்றி இனி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Jan-17, 9:03 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 272

மேலே