விவசாயி
வைகரையில் நீயெழுந்து வயலுக்கு போகையில
பொழுது புலருதென்று சேவலுக்கும் சொன்னவனே
எருதுகளை நீபூட்டி ஏர்உழுவும் பேரழகை
கதிரவனும் காணத்தான் காலையிலே எழுந்தானோ
நாத்துநடும் வேளையில உழர்தியர்தம் குலவையில
வாய்க்காலின் கெளுத்திகளும் வரப்பினிலே துள்ளிவிழும்
வளர்ந்துவரும் கதிரெல்லாம் நெஞ்ச நிமித்திநின்னு
வாலிபனின் வீரத்தை வம்புக்கு இழுப்பதென்ன
வளர்ந்து விட்ட நெற்கதிரோ தலைகுனிஞ்சி
வயதான விவசாயி முதுகெலும்பாய் ஆனதென்ன
பயர்காக்க களையெடுக்கும் பசுமை காவலனே
அரசியலின் களையெடுக்க ஆருடம்தான் சொல்வீரோ