சீட்டாட்டம்.

அறிவிற்கு,
பொழுதுபோக்காய் வந்து
நம் அறிவை அழித்து போனதே!
பொழுதுபோக்காய்,
வந்த விளையாட்டு
நம் பொழுதாய் மாறி போனதே!.
காசு வைத்து விளையாடி
நம்மை செல்லாகாசக்கி போனதே!
கோமாளி(Joker ) வைத்து விளையாடி
கோமாளி(Joker ) ஆகி போனோமே!
மதுவில் இருந்து மீண்டாலும்
இதை மதமாய் ஆக்கி கொண்டோமே!
உடல் உழைப்பில்லா விளையாட்டு
உன்னை அழிக்கும் தெரியுமன்றோ!
மறப்போம் இந்த போதையை.
நம் மனிதர் மனம் போல் நடப்போம்
இளைஞரே!


எழுதியவர் : இரா.அன்பழகன். (8-Jul-11, 3:35 pm)
சேர்த்தது : anbazhagan
பார்வை : 343

மேலே