எப்பொழுதும் உழவு

காலை
மாலை
இரவு
எப்பொழுதும்
உழவு
என்
உண்மைக்கடவுள்
உழவனுக்கு
இவ்வுலகமே
நன்றிக்கடன் பட்டிருக்கு
இவன்
ஒருவனுக்கு
வான் மழை
பொய்த்தாலும்
இவனின்
நெற்றியின்
வியர்வை மழை
எப்பொழுதும்
பொய்க்காது
ஏன்னெனில் ?
பச்சை பயிர்
கருகுவது
இவன்
மனதிற்கு
எப்பொழுதும்
பொறுக்காது !