தேனிலவில் காதல்

பரவசமா  பறிதவித்தேன்
நான் பயத்தினிலே உன்னைஅனைத்தேன்
அதில் பழரசமா நான் நனைந்தேன்
நாணம் இழந்த முழுநிலவே என்மனம் கதகதக்க என் கைகளோ
உன்ன இழுக்க
மதி இழந்த மன்னவனா நான் கெடக்க

காதல் என்ன தெய்வீகமோ
கண்கள் மலர
ஊடலில் உண்மையென்ன
உடலும் உரச
தேடல் கேட்ட உயிர்கள் எங்கே
தேன்கள் தேட

கால்கள் இடும் கோலமென்ன
பரவசம் ஆட
இரு மனம் பேசும்
மௌன மொழிகள்
ஒரு மனம் ஆன
உறவு மொழிகள்

உயிரை குடிக்கும்
தெய்வீகம் எங்கே
கருவறை கோளம்
புதுக்கோளமாக
பிரசவ அறையில்
தெய்வீகம் பிறந்ததோ........


  • எழுதியவர் : சிவசக்தி
  • நாள் : 12-Jan-17, 3:20 pm
  • சேர்த்தது : தனஜெயன்
  • பார்வை : 46
Close (X)

0 (0)
  

மேலே