ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல்.
பங்கம் வரா காலமது,
சங்க இலக்கியம் சொன்ன செய்தியெல்லாம்,
சாகசம் நிறை மொழியாம்.

உரம் கொண்ட உடல் வளம்,
தினவெடுத்த தோள்கள்,
மரத்தமிழரின் பயமறியா வாழ்வு,
பண்பு காத்திடும் பாரம்பரியம்,
ஏறு தழுவுதல், காளை அடக்குதல்
தமிழர் கண்ட பெருவாழ்வு.

காளையர் என்பதே
கட்டுங்கடங்கா காளைகளை
அயராஆண்மை காட்டி அடக்கிடும் பேராண்மையே.

வீர விளையாட்டு,
கூர் சீவிய கொம்பு,
துள்ளிப் பாயும் நீண்ட கால்கள்,
இரும்புக்கு இணை கால் குளம்புகள்,
திரண்ட திமிர் அணைத்துப் பிடிக்க,
சுழற்றி அடிக்கும் வால்,
எத்தனை பேர் எதிர் நின்ற போதும்,
அத்தனை கைகளுக்குள்ளும் அடங்காத ஆணவம்,
எது எப்படி இருப்பினும்
காளை அடக்கி , தமிழ் வீரம் காட்டி,
தலை தூக்கி நிற்பதே தமிழர் மரபு.

காளைகளின் கொம்பிலும்,கழுத்திலும் கட்டிவிடும் பரிசுகள்,
கால் தூசுக்கு சமம் என்றே,
காளை அடக்கி, உடல் எங்கும் பெற்ற விழுப் புண்கள்,
ஏழேழு தலை முறைக்கும் எடுத்துச் செல்லும் வீர வறலாறு.

வீர விளையாட்டை,
வம்புக்கு இழுத்து, வழக்கில் புதைத்து,
வீரம் காட்டிடும் தமிழர்களின் வீரத்தையும்
குழி தோண்டி புதைக்க நினைக்கிறது நீசர் கும்பல்.

எழுதியவர் : arsm1952 (12-Jan-17, 5:28 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 1930

மேலே