மஞ்சள் மாலை

புல்வெளி பூமேலே ஒரு மஞ்சள் மாலை
புதுமழை தூரிடும் நேரம் அது
இவள் மல்லிகை கால்தடம்
அந்த மெல்லிய மேகமழையில்
மெய்மறந்து நனையுதே...

மண் வாசமும் பூ வாசமும்
புது மனம் மாறிடுமா?...
மாறாது மங்கை மனம் – உலவும்
மலர்தேக மல்லிகைதான்
அவளின் மணமோ மார்கழி
அதிகாலை பனிவிழும் வேலைதனில்
கலைகிறாள் குளிர் காற்றோடு...

எங்குமே மிதக்கிறேன் இனியவளே
ஏங்கி தினம் ...
எந்தன் காதல் மனம்
மயங்கிட...
கண்களும் மூடவில்லை
காலமும் ஓடவில்லை...

காதலியை தீண்டிட கைகளும்
கரையும் எந்தன் இதயம் சுமந்து
ஏக்கம் கொண்ட பார்வையிலே
அவள் பெயர் சொல்லி துடிக்கிறதே
திசையெங்கில் தேடல் கொண்டு ...

எழுதியவர் : கலைவாணன் (12-Jan-17, 8:47 pm)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : manchal maalai
பார்வை : 204

மேலே