அணிலே ஒரு சேதி

இராமன் தடவியதில்
கோடு வந்தது,
மனிதன் தடவினால்
கேடு வந்துவிடும்..

கேட்டுக்கொள் அணிலே
கூட்டுக்குள் இருந்துகொள்,
மாட்டிக்கொண்டால்
அதையும் பிரித்து
வேட்டையாடிவிடுவான்..

உன்பசிக்கு
ஓன்றும் கொடுக்கமாட்டான்,
பழத்தைத் தின்று நீ
பாதியை மீதிவைத்தால்,
அணில் கடித்த பழம்
அதிக சுவையென்று
அதையும் பறித்திடுவான்..

வயிற்றிலடிப்பது அவன்
வாடிக்கைதான்,
அதனால் அவன்
கிட்டே வராதே,
எட்டியே செல் எப்போதும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jan-17, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே