அழகென்ற ஒன்றுதான் தடை

அவள் வரும் வேளையில்
அந்த விழிகளின் நளினங்களை
எங்கோ நின்று இரசித்ததையும்
அவள் அழகையும் செய்கைகளையும்
என்னுள்தோன்றும் அவள்மீதான
உணர்வுகளையும் கவிதைகளாய்
எழுதியதைத் தவிர வேறென்ன
செய்தேன் அவளுக்காக?
எதையும் அவளுக்காக செய்யாமல்
எதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
கிடைக்கப்போகாத அவளின் உறவைவேண்டி?
நான் அவள் நினைவுகளில் விழ காரணம்
அவள் அழகும் எனதெழுத்துக்களும்தான்.
அதற்காக அழகாக உள்ளவர் அனைவரின்
நினைவுகளில் வீழ்பவனும்
ஒருவேளை வீழ்ந்தால் அதை
எழுத்துக்களால் வடிப்பவனும் நானல்ல
அவள் திருமணம் வரை.
எனது உணர்வுகளைச் சொல்ல அவள்
அழகென்ற ஒன்றுதான் தடை. - ஆனால்
“ஏன் அந்த உணர்வு?” என்ற
வினாவிற்கு அதே அழகுதான் விடை!
எனது எண்ணங்களைச் சொல்ல
ஒரு வாய்ப்பாய்ப் புன்னகையுடன்
சேர்ந்த ஓர் பார்வையை
என்மேல் வீசினால் போதுமே!
எனது எழுத்துக்களை அவளிடம்
சேர்த்து அது படைக்கப்பட்ட
பயனையாவது நிறைவேற்றுவேன்.
என்றாவது வீசுவாள் என்று
எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் நான்????