மௌனத்தின் தேடல்

மௌனத்தின் தேடல்

எங்கும் சத்தங்களாகவே வியாபித்திருக்கும் இவ்வுலகிலே
மௌனத்திற்கென்று ஒரு முகவரி கிடையாது..
ஒரு நொடி மௌனமும் அடுத்தவரை
சந்தேகம் கொள்ளச் செய்யும்..
அதற்காகவே எப்போதும் எதையாவது
பேசிக்கொண்டே இருக்கிறான் மனிதன்..

மௌனம் ஒரு உருவெடுத்து
தனக்கென ஒரு தனியிடம் தேடி
அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது..

அதனால் தாங்கிக்கொள்ள முடியா ஓசைகள்..
எங்கெங்கும் அலைந்து அலைந்து
கடைசியில் வீலெனக் கத்தி
மௌனம் தன் மௌனம் கலைத்தது..

அதன் தேடுதல் தோல்வியில் முடிந்தது..
அதற்கான வெற்றி என்று கிட்டுமென‌
அதற்கு நிச்சயமாய் தெரியாது..
இருந்தும் தன் முயற்சியால்
தன்னையே தேடித் தேடி
காலம் நகர்த்துகிறது இந்த மௌனம்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-17, 12:34 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : mounathin thedal
பார்வை : 233

மேலே