இன்று
முதலில் என் பெயர்
அழிக்கப் பட்டது
என் நாக்குகள்
வெட்டப் பட்டன
மொழி மறைக்கப்பட்டது
வீட்டின் சுவர்கள்
தரைமட்டமாக்கப்பட்டது
ஆடைகள்
தீக்கிரையாக்கப்பட்டது
அம்மணாண்டிகளாக்கப்பட்டோம்
நாங்கள் விளையாட
மறுக்கப்பட்டோம்
எங்கள் திருவிழாக்கள்
ஏமாற்றப்பட்டது
விதைத்தவரகள்
மரணிக்கப்பட்டார்கள்
உணவும் தண்ணீரும்
கானல் நீராக்கப்பட்டது
என்ன
எதுவென்று
புரிய முயற்சிக்க
மறுக்கப்பட்டு
ஆட்டு மந்தைகளாய்
அடைக்கப்பட்டு
மேய்ப்பர்களின்
கனவுகளோடு
புதைக்கப்பட்டு
கொண்டிருக்கிறோம்
அடையாளம் தொலைத்த
எங்களின் அரசியல்
காற்றில் பறந்து
கொண்டிருக்கிறது....