வெறியற்றவர்களெல்லாம் பிணமென்றால், நாங்களும் பிணங்கள் தான்
வெறியென்னும் விஷத்தை உட்கொண்டு, தனது இனம், தனது மொழி, தனது நாடு, தனது மதம் தனது சாதியென்று வீழ்ந்துகிடக்கும் பிணங்கள் கூறுகின்றன நல்லநெறியை விதைப்போரை பிணங்களென்று....
உங்களுடைய இழிவுரை கண்டஞ்சோம்...
இயற்கை அன்னையின் துணை எங்களுக்கு உண்டு...
நல்லதொரு மனித சமுதாயம் உருவாக்க வேண்டுமென சித்தம் கொண்டுள்ளோம்...
வெறி கொண்டோரையெல்லாம் அவர்களுடைய வெறியே வேரறுக்கும்...
நிச்சயமாக உண்மைப் பரம்பொருளின் மீது ஆணையிட்டு கூறுகிறோம்...
ஒரு தட்டிலுள்ள உணவு எவ்வளவு ஆரோக்கியமானதாக வேண்டுமானாலும்
இருக்கட்டும்...
ஒரு துளி விஷம் போதும் தட்டிலுள்ள முழு உணவின் சுவையையும், குணத்தையும் மாற்றுவதற்கு...
அது போன்றதே வெறியென்னும் விஷமும்....
மமதை கொடுத்து, மாண்பினை அழிக்கும்...
தற்பெருமையடித்துக் கொள்ளுவதில் எத்தகையச் சிறப்பையும் தமிழ் பெறுவதில்லை...
தமிழை உலகமெல்லாம் பரப்புவதில் உள்ளது சிறப்பு...
தமிழ்நாட்டிலேயே தமிழ் ஆட்சி மொழியாக இல்லை..
இந்நிலையில் எந்த உரிமைகளுக்காக போராடுகிறோம் தமிழர்களே?..
அன்பு, கருணையால் அடித்தளமிடு என்று எங்களுக்கு போதித்த எங்களது தமிழ்வழி வாழ்கிறோம்...
இங்கு வந்து உங்கள் வெறியைத் திணிக்காதீர்கள்...