எப்போது விடியும்
விடிவெள்ளி கூட தினம் வருகிறது
விடிவு தான் வரவில்லை
பசியும் கூட வேளாவேளைக்கு வருகிறது
உணவு தான் கிட்டவில்லை
தூக்கம் கூட அவ்வப்போது வருகிறது
துக்கம் தீரும்நாள் எப்போது?
ஏக்கம் மட்டுமே சொந்தம் என்றால்
எதற்கு மனிதனாய் பிறந்தேன் இப்போது?