இது என்ன மௌனம் பெண்ணே சொல்லிடுவாய்

அடியே , ஏ, பெண்ணே
உன் மனதில் நீ என்ன
ரம்பாவோ ஊர்வசியோ
என்று உன்னை நினைத்தாயோ
இல்லை எகிப்திய அழகி
கிளியோபாட்ரா என்று எண்ணமா
இல்லை டிராய் அழகி ஹெலன்
தான் என்று உன்னையே
நீ நினைத்தாயா
கொஞ்சம் நில்லு
எனக்கோர் பதில் சொல்லு

நீ அழகிதான்
நானும் ஒத்துக்கொள்கிறேன்
இல்லை என்று சொல்லவில்லை
ஆனால் பெண்ணே
உன்னையே என்னவளாய் நினைத்து
உன் பின்னால்
பித்தனாய் அலைகின்ற என்னை
நீ ஒரு கணமேனும்
நின்னு பார்த்தாயா
நீ யார் என்று கேட்டாயா
இல்லை இல்லை
பின் "என் பின்னால்
பித்தனாய் அலையும்
நீ யார்" என்று என்னை
தட்டி கேட்கவும் இல்லையே நீ

உன் மௌனத்தில்
உன் சம்மதம் இருக்கு
என்று நான் எண்ணிடலாமா
உன்னை என் காதலியாய்
என் மனதில் இருத்திடலாமா
சொல்லிடுவாய் மௌனப் பெண்ணே

உன் மௌனம் என்னை
குழப்புகிறதே நான் என் செய்வேன்
அது சம்மதமா இல்லை
இல்லை பேரழகி என்ற
உன் இறுமாப்பின் இலக்கணமே
நான் அறியேன்

மௌனத்தை கலைத்து
பெண்ணே எனக்கு
உன்னை உணர்த்திடுவாயா
என் காதலுக்கு பதில் ஒன்று
சொல்லிடுவாயா

அதுவரைப் பெண்ணே
பித்தனாய் உன்னையே
நான் சுற்றிவருவேன்
உன் அழகில் மயங்கிடும்
இந்த வண்டிற்கு
நீ மகரந்தம் தாங்கிவரும்
வாசனைப்பூ என்பேன் நான்


நீ ஒரு மௌனிதான் பெண்ணே
ஆனால் உன் கண்கள் பேசுதடி
ஆயிரம் மொழிகள்
அந்த மௌனமொழிகளிலே
என்னை ஏற்றுக் கொள்வேன்
என்ற மொழியும் உள்ளதென்று
எண்ணுகின்றேன்
இந்த உன் காதல் பித்தன்
என்னை ஏமாற்றிவிடாதே
பெண்ணே, பேரழகே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (19-Jan-17, 1:52 pm)
பார்வை : 109

மேலே