அழகென்ற சொல்லுக்கு நீ

அள்ள அள்ள குறையாத
இன்பச்சுரங்கமடி நீ
பூலோகத்தில் தோன்றிய
அழகு தேவதையடி நீ
ஆயிரம் நிலவொளியின்
பிரகாசத்தை உன் ஒருத்தியின்
முகத்தில் கண்டேனடி நான்...
அழகென்ற சொல்லுக்கு நீ
அதை அராதிக்கவே நான்...

வானவில்லுக்கு வண்ணம்
உன் ஆடையிலிருந்து தந்தாயோ
மின்னலுக்கு ஒளி
உன் கண்ணிலிருந்து தந்தாயோ
கார்மேகத்துக்கு கருமை
உன் கார்குழலிலிருந்து தந்தாயோ
பூமிக்கு பசுமை உன் பார்வையிலிருந்து தந்தாயோ
அழகென்ற சொல்லுக்கு நீ
அதை அராதிக்கவே நான்...

நதிக்கு நெளிவு உன் நளினத்திலிருந்து தந்தாயோ
நீருக்கு தெளிவு உன்
சிந்தையிலிருந்து தந்தாயோ
பசும்பாலுக்கு வெண்மை
உன் மனதிலிருந்து தந்தாயோ
தேனுக்கு சுவை உன்
நாவிலிருந்து தந்தாயோ
பூக்களுக்கு வாசம் உன்
சுவாசத்திலிருந்து தந்தாயோ
அழகென்ற சொல்லுக்கு நீ
அதை அராதிக்கவே நான்....

எழுதியவர் : செல்வமுத்து.M (19-Jan-17, 10:00 am)
பார்வை : 331

மேலே