கருவிழியில்லா காதலர் வேண்டுதல்

சத்தம் போடுவேம் இனிமையான குரலில்
என்ஜின் இல்ல இரயில்பெட்டிகள் நாம்
வண்ணங்கள் பல வண்ணமே
நாமக்கு ஒரே வண்ணமே

தூங்க கண்கள் நாம் காதுகள்
நடையிலும் துணை கோல் கொண்டே நடப்போம்
தொட்டு தொட்டு படிப்போம் புத்தகம்

உருவம் பார்க்க காதலும் தோன்றும் நாம் இடையே
மனம் விட்டு மனமும் மாறிக்கொள்ளும்

நாம் நிழலை பார்க்க முடியாதே
என் நிழல் நீ உன் நிழல் நான் என
இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ......

நான்குபுலன்கள் தான் எங்கள் தோற்றம்
விண்வெளியும் புல்வெளியும் ஒன்றே என தோன்றும்
அன்பு மட்டுமே குறிக்கோளை கொண்டு வாழ்க்கை நகரும் ....

இருள் இமை காதலர்கள் ....
தொடு உணர்வாலே ஒரு உலகை படைப்போம்
அதில் ஆவது ஐம்புலம் கொண்ட ஜீவனை படைப்போம்
ஓரிறை அருளை கொண்டு .

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (20-Jan-17, 7:53 am)
பார்வை : 898

மேலே