அநாதையாய் மனம்

எங்கிருந்தோ வந்தான் எதிரி நாட்டிற்குள்
தங்கியிருந்து உளவு பார்த்துச் சென்றான்
தங்கமாய் மின்னும் பூமி கண்டு
அங்கத்தில் அழிக்கும் எண்ணம் கொண்டான்......

பச்சை வண்ணம் கொஞ்சி விளையாடும்
கழனியில் நெல்மணிகள் காற்றில் அசைந்தாடும்
கவின் துள்ளும் இயற்கை ஓவியமதை
கட்டிடங்கள் கட்டி சிதைக்கத் தொடங்கினான்......

காவிரி வைகை நதிகள் பாய்ந்தோடின
காய்ந்திட வைக்க வஞ்சகன் வந்தான்
தண்ணீரை உறிஞ்சி யெடுத்து விற்றான்
வறட்சியால் விவசாயியின் வயிற்றில் அடித்தான்......

ஏறு தழுவுதல் தமிழன் மரபு
விதியின் வலையில் பிடிக்க நினைக்கிறான்
எவனோ ஒருவன் தடைகள் விதிக்க
எங்ஙனம் மறையும் எங்கள் இயல்பு......

எங்கள் கூட்டில் நுழைந்து கொண்டு
வாழ்க்கையின் வளங்களை சிதைக்க முயல்கிறான்
அடித்து விரட்ட கரங்கள் துடிக்கிறது
சிலநேரம் அநாதையாய் மனம் அழுகிறது......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 2:22 pm)
பார்வை : 434

மேலே