நதியில்லாத ஓடம்

குளிர்ந்த காற்று தேகம் தழுவ
அலர்ந்தப் பூக்கள் மணம் கமழ
விரிந்த வானம் மழைப் பொழிய
பிறந்த நாளன்றே அன்னையை இழந்தேன்......


நடந்து வந்தால் பாதங்கள் நோகுமென்று
தந்தை பூப்போல் சுமந்து கொண்டும்
தேனும் பாலும் அன்போடு தினமும்
ஊட்டி மகிழ்வார் இரண்டாம் மனைவிக்கு......


பாட்டியின் மடியில் மலராய் தவழ்ந்து
பாசமெனும் அமுதினைப் பருகியே வளர்ந்தேன்
நோயில் படுத்த வயது முதிர்ந்தவளும்
சுவர்க்கம் சென்றிட நிழலிழந்து வாடினேன்......


சிற்றன்னையின் உள்ளம் அனலாய் கொதிக்க
தகப்பன் நேசம் நெருப்பை உமிழ்ந்தது
வீட்டிற்கு பாரமென்று கசக்கி வீசிட
கூட்டிய குப்பையோடு தெருவில் கிடந்தேன்......


கையேந்தும் மனிதரைப் பார்த்தால் மனமுருகுவேன்
ஆறாம் ஆண்டிலே அனுபவித்து உணர்கிறேன்
வயிற்றின் பசியினை தீர்க்க இயலாது
தனிமையில் நிற்கிறேன் நதியில்லாத ஓடமாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 2:42 pm)
பார்வை : 128

மேலே