இதற்காகவா பெற்றோம் சுதந்திரம்

இதற்காகவா பெற்றோம் சுதந்திரம்
இந்த தேசத்தின் வறுமை யை
நீக்க முடியாதவர்களின் கையில் தேசத்தை கொடுக்கவா
வுயிர் சிந்தி வுதிரம் கொட்டி
வெள்ளையர்களின் தோட்டக்களை த் தா ங்கி
போராடி பெற்றோம் சுதந்திரத்தை
அன்னையே வலிக்கிறது இதயம்
உன்னை விற்று வெளிநாட்டில் பணம் போடும்
உளுத்தர் கள் இன்னும் நாட்டில்
உலாவுகிறர்களே என்று எண்ணும்போது
உயிர் துடித்து தான் போகிறது
விலை பேசி விற்றுவிட்ட சுதந்திரத்தை மீட்க
இன்னொரு காந்தியும் பாரதியும் வருவார்களா
இல்லை இன்னொரு நேதாஜி தான் வருவாரா
நம்மை அடிமை படுத்த வெள்ளைக்காரன் தேவை இல்லை
நம் நரசியல் வாதிகள் போதும்
தாரை வரது கொடுத்து தனக்கு வேண்டியதை மட்டும்
டாலரில் பெற்றுக்கொண்டு
அமெரிக்காவில் குடியேறிவிடுவார்கள்
வயிற்றுக்கும் வாய்க்குமாய் நாம்
போராடி போராடி தொட்ட்ருபோவோம்
தண்ணீ ருக்கொரு போராட்டம் மின்சாரத்துக்கு போராட்டம்
ஜாதிக்கொரு போராட்டம் வேலைகேட்டு போராட்டம்
நியாயம் கேட்டு போராட்டம் நீதி வேண்டி போராட்டம்
இப்படியே போராடி போராடி
இத்துப்போன இதயத்துடன் வருட வருடம்
தேசியக்கொடியேற்றி வறண்ட தொண்டையுடன்
வந்தே மாதரம் என்று வாழ்த்து பாடி விட்டு
ஒய்ந்துபோகிறோம்
இந்த மண்ணில் வந்து
இந்த தேசத்தின் வீரர்களை தலை கொய்து போனபின்பும்
சமாதான கீதம் பாடி அழுது நிற்கிறோம்
விடியுமா இனியேனும் வானம் பார்த்து நிற்கிறோம்
இன்னொரு பாரதி உதயமாகும் வரை
கலங்கிய கண்களோடும் கனத்த இதயத்தோடும்
காத்திருக்கிறோம் காத்திருக்கிறோம்
உண்மையான வேதனையுடனும் உணர்வுடனும்

எழுதியவர் : (20-Jan-17, 7:41 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 166

மேலே