அலங்கோலம்

மாவிழைத்துத் தேய்த்த மாக்கோலம்
தீபத்தட்டில் அரைத்தசந்தனத்தோடு குங்குமம்
கீழிருந்து மேலெழும் அகில்புகை
மதிலெங்கும் மாவிலைத் தோரணம்
மங்கையர்கள் ஆரத்தியுடன் வரிசையாக முன்னேசெல்ல
வரிந்துகட்டிய கோவணத்துடன் வாலிபர்கள் பின்னேசெல்ல
மைதானம் முழுவதும் மனிதத்தலைகள்
மரத்தினிலைகளை மறைக்கும் மனிதக்கூட்டம்
மாடவிளக்குகளின் மங்காத ஒளிகளுக்கிடையே
அற்புதமொன்று நிகழுமோ
அனைவரும் எதிர்பார்த்தபடி நிற்க
திருமணமா?.. கோவிலா?...
திருவிழாவா?... தீமிதியா?...
இல்லை! இல்லை!
இல்லையென்றால் பின்னே என்ன?...
இல்லை! இல்லை!
அன்றிருந்த அலங்காநல்லூர்......
இப்போது...ஜல்லிக்கட்டில்லாமல்
அலங்கோலநல்லூராகி போனதோ?...
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி