என் மொழிஎன் பாசம்

மொழி என்பது வேறு ,அறிவு என்பது வேறு .
அறிவை அறியாத மொழியில் ,பெறுவது கடினம் .
ஆங்கிலம் கற்றுக் கொள்கிறோம்.அதை ஒரு மொழியாக ஏற்று கொள்கிறோம்.
அதை ஒரு பாடமாக,என் முதல் வகுப்பில் இருந்து வை.
அதை முனைவர் பட்டம் பெறும் வரை கூட வை...
தமிழ் மொழியில் ஆய்வறிக்கை வெளியிடலாம் என சொல்லுங்கள் ...
பல ஆய்வு கட்டுரைகள் வெளிவரும் தமிழ் மொழியில்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை தான்,பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.
அதை தமிழ் மொழியில் வடிவமைக்கலாம்.
புதிதாக காணப்படும் அறிவே அதிலே சேர்த்து புதுப்பிக்கலாம்.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி...தமிழன் எட்டுதிக்கும் செல்ல உதவும் எனவே.,
அதை தனியே கற்று கொள்கிறோம். .
அறிவு என்பது மொழியோடு சேராது.
எனவே அதை எம் மொழியில் கற்று கொள்கிறோம்.
பரிட்சை என்பது என்ன?
படித்ததை எழுதுவது அல்ல...
கற்று கொண்டதை எழுதுவது...
மாணவனுக்கு ஒரு கேள்விக்கு , விடை தெரியும்.
ஆனால் அதை எழுத மொழி தெரியாது.
என்பது அவனது குறையா? அதை வடிவமைத்த கல்வியாளர்கள் குறையா?
12 ஆம் வகுப்பு வரை தமிழில் படிக்கிறான்.
கல்லூரி சென்றதும் அவன் படித்த அதை வார்த்தையே
ஆங்கிலத்தில் இருப்பதால் ...
கண்ணிருந்தும்,அதற்கு பொருள் தெரிந்தும்...
குருடனாய். , ஊமையாய் இருக்கிறான்..
மத்திய அரசு பணி தேர்வில் ஒரு கேள்வி ஆங்கிலத்திலும்
இந்தியிலும் கேட்கப்படுகிறது.தமிழனும் அதை எழுத தகுதி உண்டு...
என்றாலும் , தேர்வு முடிந்து அய்யாய்யோ தமிழில் கேட்டிருந்தால்
எழுதியிருப்பேனே..,என தலையில் அடித்து கொண்டவர் எத்தனை பேர்...
மத்திய அரசு பணியில் தமிழர் குறைவு என கூறுபவர் எத்தனை பேர்.
படிப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களை அமைச்சர்களாகவும்,கல்லூரி
நிர்வாககிகளாகவும் வைத்திருப்பது தான் நாம் செய்யும் தவறு...
மெரினா கடற்கரைக்கு செல்லும் போதெல்லாம்
இது தமிழ் நாடா...இல்லை அயல்நாடா என்ற எண்ணம் என்னுள் எழக்கூடும்...
ஒவ்வொருவரும் இந்தியில் பேசுவார்கள,இல்லை ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
கடந்த நான்கு தினங்களாக எனக்கு பேச வார்த்தை வரவில்லை..
கண்ணீர் பேசுது கண்ணீல்.
நீங்க சாப்டீங்களா,இந்தா தண்ணீ குடிங்க என வாஞ்சையாக கேட்கும் மொழி தான் என்
தாய் மொழி.
உங்களுக்கு தெரியுமா,
என் ஆடு,என் மாடு,என் கோழிக்கு பெயருண்டு
அதை பெயர் சொல்லி அழைத்தால் ,கன்றோடு,குஞ்சோடு ஓடி வரும்.
என் ஆட்டு குட்டி என் மடியில தூங்கும்..
என் கோழி என் கையில இரை திங்கும்.
என் அம்மாவுக்கு அதுதான் மொத புள்ள...
நா அதுக்கு தம்பி..அதுக்கு கொசு கடிச்சா கொசுபத்தி..
கத்தாடி இது தான் என் பாசம்,கலாச்சாரம்.
பத்து வருடத்திற்கு முன் என் வீட்டில்,தயிர் வைத்தால் சுவையாக மணமாக இருக்கும்.
இன்று ஒவ்வொறு நாளும் வேறு வேறு சுவை...
அன்று அது என் நாட்டு மாட்டு பால்..
அதுவும் ஒர் உயிர் தானே..
அதனிடம் உன் அறிவியலே புகுத்தாதே.
கலப்படம் செய்யாதே..
இயற்கையை அழிக்காதே...
லாரியில மாடெல்லாம் தலைய நீட்டீகிட்டு ,
அழுதபடியே ,போகும் அத பாக்கும் போதேல்லாம் என் ஈர கொல நடுங்கும்.
பால்காரன் கன்னுகுட்டிக்கு பால் இல்லாம பிச்சிறுவனு,கன்னுகுட்டிய அலாரம் வச்சு
அவுத்துவிடுவோம்.ஆண் கன்னா பெறந்துச்சுனா,
இர கடிச்சதும் வித்துருவாங்க,அப்படி விக்கும் போது வளக்குரவனுக்கு மட்டுமே
விப்போம்.
நாங்களா, மாடுகளை துன்புறுத்துகிறோம்.
மொழியால்,சட்டத்தால் நீங்கள் தான் துன்புறுத்துகிறீர்.
எம் ஊரில் ஊரணிக்கும் பெயருண்டு,அதை சுற்றி நிற்கும் மரத்திற்கும்
பெயருண்டு.ஆயிரம் ,ஆயிரம் காலம் வாழும் மரமும் என் சொந்தம்.
விவசாயிக்காக போராட இவ்வளவு பேர் இருக்கிறார்கள்.
இனி விவசாயத்தை இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும்..
விவசாயி மகன் விவசாயி என்பதில் பெருமை கொள்வான்..
நம் மொழி ,கலாச்சாரம், பண்பாடு காப்போம்.
தமிழோடு வாழ்வோம்..
தமிழனாய் இருப்போம்...
விவசாயத்தை காப்போம்...

எழுதியவர் : (21-Jan-17, 11:55 am)
சேர்த்தது : குருமுருகன்
பார்வை : 99

மேலே