எனக்கு எதுக்கு தடை

எவனடா, நீ எதிர்பது....
என்னோடு விளையாட மறுப்பது...
தொழுவோடு...
வயலோடு நின்றுவிடவில்லை...
என் உறவு...
வாடி வாசல் வழியோடு..
மார்போடு சேர்திருக்கும் உறவு....
கொம்புக்கு வண்ணம் பூசி...
உடம்பெல்லாம் பொட்டு வச்சு...
கழுத்துல பட்டு கட்டி ..
வருவேன்டா நா சூரக்குட்டி...
தமிழன் மார்புதான்...
என் திமிலுக்கு அட...
என் திமில தொட
தமிழனுக்கா தட..
ஏர் புடுச்ச கையிக்கு...
என் தோள் புடிக்க தடை எதுக்கு..
பாசமுன்னு ஒன்னு...
பாரினில் உண்டு...
பார் அந்த பாசத்த....
மாட்டோடு மண்ணோடு...
என் தாயா? தட போட்டா
தம்பியோடு விளையாட...
தட போட நீ யாரு...
தமிழ் நாட்ட விட்டு போயிரு...
வருசத்துக்கு ஒரு முற..
வாடி வாசல் காட்டீரு...
தமிழா உன் புகழ...
உலகத்துக்கே காட்டீரு...

எழுதியவர் : (21-Jan-17, 1:22 pm)
சேர்த்தது : குருமுருகன்
பார்வை : 65

மேலே