சிலிக்குதடா சிங்கத்தமிழனே
இரவு பகல் என பாராமல் ..எங்கள்
உறவு கூட்டம் போராட..
பெருமைமிகுந்த ஆட்டத்தின்
அருமை தெரியாமல் தடைபோட்ட..
சுயநலகூட்டத்தை விரட்டுவோம்.
இனி வரும் காலம் நமதாக,
நல்லோர் நம்மை ஆண்டிட
ஒன்றாய் கூடி அனைவரும்
நல்லபாடம் புகட்டுவோம்.
திட்டம்போட்டு வரவில்லை.இது
நிஜமோஅன்றி கனவில்லை.
கொட்டும் பனியும் வாழ்த்திடவே..திசை
எட்டும் எம்இனம் போரிடுதே...
கத்தி..சண்டை..எதுவுமில்லை..
கத்தி உரிமை கேட்கிறதே..
சுத்தி உலகம் பார்க்கிறதே... எம்
வீரத்தை எண்ணி வியக்கிறதே..