தமிழகம் காணும் இந்தக் கூட்டம்

தமிழகம் காணும் இந்தக் கூட்டம்


அ  அயராத கூட்டம்

ஆ ஆத்மார்த்தமான கூட்டம்

இ இனைந்து செயல்படும் கூட்டம்

ஈ ஈரேழு உலகமும் வியந்த பார்க்கும் கூட்டம்

உ உரிமைக்குப் போராடும் கூட்டம்

ஊ ஊக்கத்தை ஏற்படுத்தும் கூட்டம்

எ எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கூட்டம்

ஏ ஏர் பிடிப்பவனை ஆதரிக்கும் கூட்டம்

ஐ ஐயத்தை தகர்க்கும் கூட்டம்

ஒ ஒற்றுமைக்கு உதாரணம் இந்த கூட்டம்

ஓ ஓயாது உழைக்கத் தயாராகும் கூட்டம்

ஔ ஔவியம் அறியாக் கூட்டம்

ஃ அஃதே மாணவ மாணவியர் கூட்டம்


தேதி - 21.01.17    நேரம் - இரவு 10 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (21-Jan-17, 10:30 pm)
பார்வை : 117

மேலே